உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 6 வார்டுகளில் இன்று நடைபெறுகிறது: மாநகராட்சி தகவல்

 

சென்னை, ஜூலை 16: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் சென்னையில் இன்று 6 வார்டுகளில் நடைபெறுகிறது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று (16ம்தேதி) திருவொற்றியூர் மண்டலம், வார்டு-1ல் கே.எச்.சாலை, காமராஜ் நகர் சமூக நலக் கூடம், மணலி மண்டலம், வார்டு-20ல் காமராஜர் சாலை மணலி மண்டல அலுவலகம், அம்பத்தூர் மண்டலம், வார்டு-79ல் விஜயலட்சுமிபுரம்,

பி.டி.ஆர். திருமண மண்டபம், அண்ணாநகர் மண்டலம், வார்டு-94ல் சிட்கோ நகர், ராஜராஜேஸ்வரி திருமண மண்டபம், ஆலந்தூர் மண்டலம், வார்டு-167ல் நங்கநல்லூர், 100அடி சாலை ஸ்கேட்டிங் மையம், அடையாறு மண்டலம், வார்டு-179ல் குப்பம் கடற்கரை சாலை, சமூகநலக் கூடம் ஆகிய 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது. இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொது மக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில கூறப்பட்டுள்ளது.

The post உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 6 வார்டுகளில் இன்று நடைபெறுகிறது: மாநகராட்சி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: