சென்னை, ஜூலை 16: அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியை சேர்ந்தவர் மோகன் (26). இன்ஜினியரான இவர், சோழிங்கநல்லூரில் உள்ள பிரபல தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். வழக்கமாக தனது நண்பர்களுடன் சூளைமேடு நெடுஞ்சாலையில் உள்ள பேட்மிண்டன் பயிற்சி மையத்தில் தினமும் விளையாடி வந்தார்.
அதன்படி கடந்த சனிக்கிழமை மோகன் தனது நண்பர்களுடன் பேட்மிண்டன் விளையாடிய போது திடீரென மயங்கி சுருண்டு விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் மோகனை மீட்டு கோடம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பிறகு உயர் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த மோகன் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து கோடம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பேட்மிண்டன் விளையாடிய இன்ஜினியர் திடீர் மரணம் appeared first on Dinakaran.
