×

தாம்பரத்தில் பரபரப்பு ரயில் இன்ஜின் மீது ஏறி நின்ற பெண்

 

தாம்பரம், ஜூலை 16: தாம்பரம் ரயில் நிலையம் அருகே தாம்பரம் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் சுரங்கப்பாதை அருகில் ரயில் இன்ஜின்நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் அந்த இன்ஜின் மீது பெண் ஒருவர் ஏறி நின்று கொண்டிருந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து ரயில் இன்ஜின் மேல் சென்ற மின் இணைப்பை துண்டித்து, அந்த பெண்ணை பத்திரமாக கீழே இறக்கினர். கீழே இறங்கியவுடன் அந்த பெண் பாதுகாப்பு படையினரை பார்த்து சிரித்து, மனநல பாதிக்கப்பட்டவர் போல் நடந்துள்ளார். இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அந்த பெண்ணை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

The post தாம்பரத்தில் பரபரப்பு ரயில் இன்ஜின் மீது ஏறி நின்ற பெண் appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Tambaram East ,Tambaram Railway Station ,Dinakaran ,
× RELATED கனமழை காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.13.35 கோடி ஒதுக்கீடு