×

ஏடிஎம் மிஷின்களில் பணம் நிரப்பும் நிறுவனத்தில் ரூ.50 லட்சம் திருட்டு: தலைமறைவான ஊழியருக்கு வலை

 

தாம்பரம், ஜூலை 16: தேனாம்பேட்டையில் வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் நிறுவனத்தில் ரூ.50 லட்சம் திருடிய ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர். தேனாம்பேட்டை கிரியப்பா சாலையில் சிஎம்எஸ் இன்போ சிஸ்டம் என்ற பெயரில் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் பணியை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் சங்கர் என்பவர், வாகனங்களில் சென்று ஏடிஎம் மையங்களில் பணத்தை நிரப்பும் பணி செய்து வந்தார்.

கடந்த வாரம் ஏடிஎம் மையங்களில் பணத்தை நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்த போது மொத்த பணத்தில் ரூ.50 லட்சம் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சங்கரிடம், அந்நிறுவன அதிகாரிகள் விசாரித்த போது, பணத்தை அவசர தேவைக்கு பயன்படுத்தியதாகவும், பணத்தை திரும்ப ஒப்படைப்பதாக உறுதி அளித்துள்ளார்.

ஆனால் பணத்தை திரும்ப ஒப்படைக்காமல் திடீரென சங்கர் மாயமாகிவிட்டார். இதுகுறித்து தனியார் நிறுவனத்தின் மேலாளர் கார்த்திக் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சங்கரை தேடி வருகின்றனர்.

The post ஏடிஎம் மிஷின்களில் பணம் நிரப்பும் நிறுவனத்தில் ரூ.50 லட்சம் திருட்டு: தலைமறைவான ஊழியருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Thambaram ,Tenampet ,CMS Info System ,Kiriappa Road ,Dinakaran ,
× RELATED வடகிழக்கு பருவமழை காரணமாக...