மதுராந்தகம், ஜூலை 16: மேல்மருவத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் புற்கள் நிறைந்த பகுதி தீப்பிடித்து எரிந்ததால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புகை மூட்டம் சூழ்ந்து வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூர் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நன்கு வளர்ந்து புல்வெளி பகுதி திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் தீ பரவியது.
இதன் காரணமாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புகை மூட்டம் சூழ்ந்தது. இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அச்சிறுப்பாக்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் மற்றும் மதுராந்தகம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமலை ஆகியோர் தலைமையில் சுமார் 15 தீயணைப்பு வீரர்கள் இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அனைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
The post மேல்மருவத்தூர் அருகே புல்வெளியில் திடீர் தீ appeared first on Dinakaran.
