சென்னை : சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர்கள் குமார், சித்தர தம்பதி. இவர்களுக்கு சங்கர், வனிதா என்ற இரண்டு குழந்தைகள் இருந்து உள்ளார்கள். குமார் கூலி வேலை செய்து வருகிறார். சங்கர் அடையாறில் உள்ள தனியர் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துவந்துஉள்ளார். படிப்பு சரியாக வரவில்லை என கூறி பாதியிலே நின்றுவிட்டார்.
நண்பர்கள் உடன் சேர்ந்து கேட்ரிங் வேலை செய்து வருகிறார். சம்பவத் அன்று சங்கருக்கு பிறந்த நாள் அதனால் நண்பர்கள்உடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடுவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்று இருக்கிறார். காலையில் சென்றவர் இரவு ஆனபிறகும் வீடு திரும்பவிலை.
இதனால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை கொடுக்கையூர் காவல் நிலையத்தில் புகார் குடுத்து இருக்கிறார் சங்கர் குறித்து போலீசார் விசாரித்து கொண்டிருந்தபோதே எருக்கன்ஞ்சேரி கைலாசம் தெருவில் உள்ள முட்புதரில் ஒரு ஆண் சடலம் கடைப்பதாக தகவல் வந்துருக்கிறது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வெட்டு காயங்களோடு கிடந்த சடலத்தை மீட்டு இறுகிறார்கள்.
காணாமல் போன சங்கரின் அங்கு அடையாளங்களோடு சடலம் ஒத்துபோய் இருகிறது. அவரின் பெற்றோரும் அது சங்கர் தான் என்பதை அவர் உறுதிசெய்து இறுகிறார்கள். பிறந்தநாள் கொண்டாடுவதாக கூறிவிட்டு சென்றவர் எப்படி இங்கு சடலமாக கிடக்கிறார் என்று தெரியாமல் சங்கரரின் பெற்றோர் குழம்பிபோயிருக்கிறார்கள் போலீசாரின் விசாரணையில்தான் அந்த குழப்பத்திற்கான விடை கிடைத்து இருகிறது.
சங்கருக்கு போதை பழக்கம் இருகிறது நண்பர்கள் உடன் சேர்ந்து அடிக்கடி போதையில் மூழ்கி இருக்கிறார் ஒரு சில நாட்களுக்கு முன்பு சங்கர் கந்தா என்பவரிடம் 2500 ரூபாய் பணம் குடுத்து மெத்தம்பெட்டமைன் என்ற போதை பொருள் வாங்கியிருக்கிறார். ஆனால் காந்தாவோ மெத்தம்பெட்டமைனுக்கு பதிலாக அதேபோல இருக்கும் சமயலுக்கு பயன்படுத்தப்படும் அஜினோமோட்டோவை கொடுத்து ஏமாற்றி இருக்கிறார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சங்கர் கந்தாவை தாக்கியதாக சொல்லப்படுகிறது. காந்தாவுக்கு ஸ்டிபன்,நிதின்குமார் என இரண்டு நண்பர்கள் உள்ளார்கள். அவர்கள் இருவரும் சங்கருக்கும் நண்பர்கள் இதனால் கந்தாவை ஏன் அடித்தாய் என ஸ்டிபனும் ,நிதினும் சங்கரை தட்டி கேட்டு இருக்கிறார்கள்.
அப்போது ஏற்பட்ட தகராறில் இருவரையும் சங்கர் அடித்ததாக கூறபடுகிறது இந்த சம்பவம் ஸ்டிபனுக்கும், நீதினுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சங்கரை தீர்துகட்டிவிடவேண்டும் என்று இருவரும் லிங்கஸ்வரன் என்ற நபர்களோடு சேர்ந்து திட்டம்தீட்டி இருக்கிறார்கள்.
அவர்கள் எதிர்பார்த்த மாதிரியே அதற்கான நாளும் அமைந்துஇருக்கிறது சம்பவத்தன்று சங்கருக்கு பிறந்தநாள் என்பதால் நண்பர்கள் அனைவரையும் கேக் வெட்ட அழைத்து இருக்கிறார். பழைய பகையை மறந்து ஸ்டிபனுக்கும், நீதினுக்கும் அழைப்பு விடபட்டுருக்கிறது.
10 க்கும் மேற்பட்டோர் அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள் கேக் வெட்டியதும் மது குடித்து இருக்கிறார்கள். போதையால் சங்கர் தள்ளாடிய நேரத்தில் நீதினும் அவர்களது நண்பரும் சுத்துப்போட்டு அவரை வெட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.
உயிர் பயத்தில் சங்கர் தப்பித்து ஓடியிருக்கிறார் விடாமல் துரத்திய அந்த கும்பல் இருக்கஞ்சேரி கைலாசம் தெருவில் உள்ள முட்புதரில் வைத்து சங்கரை வெட்டி கொன்றிருப்பது. போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது இருகிறது.
இந்த சம்பவ தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ஒரு சிறுவன் உட்பட 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்து இருக்கிறார்கள்.
The post உயிரை பறித்த பிறந்தநாள் கொண்டாட்டம்: சிறுவன் உள்பட 7 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.
