திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது

திருச்சி: திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி ரங்கம் மேளவாசல் பொது கழிப்பறை அருகே போதை மாத்திரை விற்பனை நடப்பதாக ரங்கம் போலீசாருக்கு கடந்த 13ம் தேதி தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று சந்தேகிக்கும் வகையில் நின்ற வாலிபர்களை விசாரித்தனர்.

இதில் அவர்கள் மணப்பாறை கோவில்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் (24) மற்றும் கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந்த அய்யனார் (19) என்பதும், அவர்கள் அங்கு போதை மாத்திரை விற்றதும் தெரியவந்தது. இருவரையும் ரங்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து ரூ.2ஆயிரத்து 500 மதிப்புள்ள 60 போதை மாத்திரைகள் மற்றும் 6 மருத்துவ ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

பயணிகளுக்கான வசதிகள்
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அவா்களுக்கு தேவையான உணவு, சிற்றுண்டி, தேநீர், காபி மற்றும் குளிர்பானங்கள் போன்ற உணவு பொருட்கள் விற்பனைக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இப்பேருந்து முனையத்தில் 20 எண்ணிக்கையில் டீ கடைகளும், 12 எண்ணிக்கையில் உணவகங்களும், 10 எண்ணிக்கையில் சிற்றுண்டி கடைகளும் செயல்படவுள்ளது. மேலும் பஞ்சப்பூர் பேருந்து முனையத்தை ஒவ்வொரு மணி நேரமும் சுத்தம் செய்து தூய்மையாக பராமாிக்க 228 பணியாளா்கள் நியமனம் செய்யப்பட்டு தொடா்ந்து தூய்மை செய்யும் பணிகளை மேற்கொள்ளவுள்ளனா். பயணிகள் மற்றும் அவா்தம் உடைமைகளின் பாதுகாப்பிற்கு காவல் துறையினா் 52 போ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனா். பயணிகளின் தேவைக்கேற்ப ஆட்டோ, டாக்ஸி மற்றும் இ-டாக்ஸி சேவைகள் வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

The post திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: