×

புதிய வெற்றிலை மார்க்கெட் திறப்பு

நரசிங்கபுரம், ஜூலை 15: சேலம் மாவட்டம் ஆத்தூர் புதிய பஸ் நிலையம் அருகே, வெற்றிலை மார்க்கெட் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ளது. இதனை காணொளி காட்சி மூலம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நேற்று, சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் குத்துவிளக்கு ஏற்றி, விவசாயிகள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மலையரசன் எம்பி, கிழக்கு மாவட்ட பொருளாளர் ஆத்தூர் ஸ்ரீராம், நகராட்சி ஆணையாளர் சையது முஸ்தபா கமால், மாவட்ட நெசவாளர் அணி ஆறுமுகம், நகர செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், ராமச்சந்திரன், வேல்முருகன், ஒன்றிய செயலாளர் டாக்டர் செழியன், வரதராஜன், நகர மன்ற தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன், அலெக்சாண்டர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post புதிய வெற்றிலை மார்க்கெட் திறப்பு appeared first on Dinakaran.

Tags : New Betel Market ,Narasinghapuram ,Betel Market ,Athur, Salem district ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Dinakaran ,
× RELATED பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி தஞ்சம்