மருக்காலங்குறிச்சியில் தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க கூட்டம்

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் மத்திய ஒன்றிய கழக இளைஞர் அணி சார்பில்,தண்டலை ஊராட்சி மருக்காலங்குறிச்சி கிராமத்தில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 102 – வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்திக் வரவேற்றார்.ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்.இராமதாஸ் தலைமை வகித்தார்., மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் .வசந்தபகலவன், துணை அமைப்பாளர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

தலைமை கழக சொற்பொழிவாளர் கவிஞர் இளஞ்செழியன் , ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ,தலைமை கழக இளம் பேச்சாளர் சேக் அலிமாஸ் அலி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில் ஜெயங்கொண்டம் மத்திய கழக பொறுப்பாளர் மணிமாறன், மாவட்ட கழக பார்வையாளர், பொதுக்குழு உறுப்பினர் பாலு, மாவட்ட பொருளாளர் இராஜேந்திரன் மற்றும் ஜெயங்கொண்டம் மத்திய ஒன்றிய கழக நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மோகன்ராஜ் நன்றி தெரிவித்தார்.

உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்காக…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதந் தோறும் ரூ.1000 கிடைக்காத குடும்ப அட்டை தாரர்கள் முகாம் நடைபெறும் நாட்களில் இதற்கென விண்ணப்பங்கள் பெற்று முகாமிலேயே பூர்த்தி செய்து செயலில் பதிவேற்றம் செய்து மாதம் ரூ.1000 பெற்றிட வருவாய்த்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என பேட்டியின்போது கலெக்டர் தெரிவித்தார்.

The post மருக்காலங்குறிச்சியில் தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: