326 கிலோ கடத்தல் குட்கா மதுபாட்டில்கள் பறிமுதல்

ஓசூர், ஜூலை 15: ஓசூர் அருகே மினிவேனில் கடத்தி வந்த குட்கா, மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சிப்காட் பகுதியில், எஸ்ஐ அன்பழகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த மினிவேனை நிறுத்தி டிரைவரிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் வாகனத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அதில், குட்கா மற்றும் கர்நாடக மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அவர், கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த பைசல்(44) என்பதும், குட்கா மற்றும் மதுபாட்டில்களை பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் கண்ணூருக்கு கடத்திச்சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து ரூ.3 லட்சத்து 91 ஆயிரத்து 608 மதிப்புள்ள 326 கிலோ குட்கா மற்றும் ரூ.3,600 மதிப்புள்ள 48 மதுபாட்டில்களுடன் ரூ.2.50 லட்சரம் மதிப்புள்ள வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து, பைசலை கைது செய்தனர்.

The post 326 கிலோ கடத்தல் குட்கா மதுபாட்டில்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: