நீதிமன்ற வழக்குகளுக்கு செப்.30க்குள் சமரச முறையில் தீர்வு காணலாம்: நீதிபதி பேச்சு

 

விருதுநகர், ஜூலை 15: விருதுநகர் மாவட்ட சமரச சப்சென்டர் மூலம் ஜூலை 1 முதல் செப்.30 வரை சிறப்பு சமரச தீர்வு முகமையை விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிபதி அங்காள ஈஸ்வரி துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர்,குடும்ப பிரச்னை, வாகன விபத்து, குடும்ப வன்முறை, காசோலை மோசடி, வர்த்தக பிரச்னை, சமரத்திற்கு உட்பட்ட குற்ற வழக்குகள், பாகபிரிவினை வழக்குகள், வாடகை நில ஆர்ஜிதம், உரிமையியல் வழக்குகளை சமரச மையத்தில் தீர்வு காணலாம்.

சிறப்பு முகாம் ஜூலை.1 முதல் செப்.30 வரை நடைபெறும். சனி, ஞாயிறு கிழமைகளிலும் நடைபெறும். பயிற்சி பெற்ற சமரசர்கள் தயாராக உள்ளனர். மேலும் வழக்கறிஞர்கள், வழக்காடிகள் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். உடன் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் மற்றும் சார்பு நீதிபதி பாலமுருகன், குற்றவியல் நீதித்துறை நடுவர் ஐயப்பன், சமரச நடுவர்கள், வழக்கறிஞர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

The post நீதிமன்ற வழக்குகளுக்கு செப்.30க்குள் சமரச முறையில் தீர்வு காணலாம்: நீதிபதி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: