திருவாடானை, ஜூலை 15: திருவாடானை அருகே துத்தாகுடி கிராமத்தில், ஆதீனமிளகி அய்யனார் கோயில் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. திருவாடானை அருகே துத்தாகுடி கிராமத்தில் அமைந்துள்ள ஆதீன மிளகி அய்யனார், பூர்ணபுஷ்கலாம்மாள், ஏழுமுக காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு நேற்று அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் நவக்கிரம ஹோமத்துடன் முதல் கால யாக சாலை பூஜை தொடர்ங்கியது.
இரண்டாம் காலத்தில் கோ பூஜை, நாடி, ரக்ஷாபந்தனன், தீபாராதனையுடன் மேளதாளம் முழங்க புனித நீர் யாகசாலையில் கலசங்களில் வைத்து பூஜிக்கப்பட்டது. கலசங்களை சிவாச்சாரியார் தலையில் சுமந்து கோயிலில் சுற்றி வலம் வந்து கும்பத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.
இந்நிகழ்வில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post திருவாடானை அருகே அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.
