ராமநாதபுரம், ஜூலை 15: பனைக்குளம் பகுதியில் பள்ளி அருகே உப்பளம் அமைக்கும் பணியை நிறுத்தக் கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
ராமநாதபுரத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பனைக்குளம் தமுமுக, மமக நிர்வாகிகள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இது குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் வர்த்தக அணி மாநில துணை செயலாளர் பரக்கத்துல்லா கூறும்போது, ‘‘ராமநாதபுரம் அருகே பனைக்குளம் பஞ்சாயத்து தெற்கு தெரு பகுதியில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இதன் அருகே மக்கள் பயன்பாட்டில் உள்ள தனியார் பட்டா நிலத்திலும், அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்திலும் நிலத்தடி நீரை எடுத்து 15 ஏக்கர் நிலப்பரப்பில் உப்பளம் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் அதிகம் வசிக்கக் கூடிய பகுதி மற்றும் பள்ளி பகுதியில் உப்பளம் அமைப்பதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும்’’ என்றார்.
The post பள்ளி அருகே உப்பளம் அமைப்பதை நிறுத்த மனு appeared first on Dinakaran.
