×

பெருந்துறை போலீஸ் டிஎஸ்பி டிரான்ஸ்பர்

 

ஈரோடு, ஜூலை 15: தமிழகம் முழுவதும் 39 போலீஸ் டிஎஸ்பி.க்களை பணியிடம் மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இதில், ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை போலீஸ் சப் டிவிசன் டிஎஸ்பி.யாக பணியாற்றி வந்த ஆர்.கோகுலகிருஷ்ணன், கோவை சிட்டி காட்டூர் ரேஞ்சில் டிஎஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து திருப்பூர் கொங்குநகர் ரேஞ்சில் டிஎஸ்பி.யாக பணியாற்றி வந்த எம்.வசந்தராஜ், பெருந்துறை டிஎஸ்பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஓரிருநாளில் பொறுப்பேற்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

 

The post பெருந்துறை போலீஸ் டிஎஸ்பி டிரான்ஸ்பர் appeared first on Dinakaran.

Tags : Perundurai Police ,Erode ,DGP ,Shankar Jiwal ,Tamil Nadu ,R. Gokulakrishnan ,Perundurai Police Sub Division DSP ,Erode district ,Coimbatore City Kattur… ,Dinakaran ,
× RELATED விதை உற்பத்தி திட்டம் குறித்து...