இதில், சமரச மைய இயக்குனர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து பேசியதாவது:
தேசத்திற்கான சமரச பிரசாரம் 90 நாட்களுக்கு நடைபெறுகிறது. ஜூலை 1ம் தேதி தொடங்கி செப்டம்பர் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன்மூலம் சமரசத்திற்கு பரிந்துரைக்கப்படும் வழக்குகளில் சமரச தீர்வுகளை பெறலாம். உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள் தங்களிடம் நிலுவையில் உள்ள பொருத்தமான தீர்க்கக் கூடிய வழக்குகளை கண்டறிவது தேசத்திற்கான சமரசம் என்ற சிறப்பு சமரச மைய இயக்கத்திற்கு அனுப்ப வேண்டும். இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தேசிய சமரச பிரசார பேரணி: நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.
