- தஞ்சாவூர் வடக்கு மாவட்ட கழகம்
- திமுக தலைமை கழகம்
- சென்னை
- தஞ்சாவூர் வடக்கு மாவட்ட கழகம்
- தலைமை நிர்வாக அதிகாரி
- தஞ்சாவூர் வடக்கு மாவட்ட கிளப்
- தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக கழகம்
- சக்கோட்டை கே அன்பாகன் எம். எல்.
- தின மலர்
சென்னை: தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளரை நியமித்து திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக கழகச் செயலாளராக சாக்கோட்டை க.அன்பழகன் எம்.எல்.ஏ. நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் சு.கல்யாணசுந்தரம், எம்.பி. அவர்களை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக சாக்கோட்டை க.அன்பழகன், எம்.எல்.ஏ.. (நாக்கியன் கோவில் மெயின் ரோடு, சாக்கோட்டை அஞ்சல், கும்பகோணம், தஞ்சை மாவட்டம்) அவர்கள் தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் நியமனம்: திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.
