கள்ளக்குறிச்சி, ஜூலை 14: கள்ளக்குறிச்சி சிறப்பு உதவி ஆய்வாளர் மயில்வாகணன் நேற்று கள்ளக்குறிச்சி தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
அதனையடுத்து அந்த வாலிபரை போலீசார் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்ததில் கள்ளக்குறிச்சி பழைய மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுப்பிரமணி மகன் ஆறுமுகம் (20) என்பதும், அவரது பாக்கெட்டில் சில்லரை நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தது குறித்து விசாரணை செய்ததில் கள்ளக்குறிச்சி தினசரி காய்கறி மர்கெட் பகுதியில் உள்ள 4 கடைகளில் ரூ.3,750 பணம் திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து சிறப்பு உதவி ஆய்வாளர் மயில்வாகணன் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் விஜயராகவன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.
The post காய்கறி மார்க்கெட் கடைகளில் பணம் திருடியவர் கைது appeared first on Dinakaran.
