முத்துப்பேட்டை, ஜூலை 14: முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வட்டார அளவிலான சதுரங்க விளையாட்டுப் போட்டியில், 17 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவில் கோவிலூர் அருள்மிகு பெரியநாயகி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடமும், 19 வயதிற்கு உட்பட்ட இளம் பிரிவில் மூன்றாம் இடமும் பெற்று குறுவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொளள தகுதிபெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளை தலைமையாசிரியை வனிதா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் அனிதா, அஸ்வியா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.
The post கோவிலூர் அரசுப்பள்ளி மாணவிகள் சதுரங்க விளையாட்டு போட்டியில் சாதனை appeared first on Dinakaran.
