×

ரூ.92.70 லட்சம் மதிப்பில் நியாய விலை கடை நூலகம், சிறுவர் பூங்கா: இ.கருணாநிதி எம்எல்ஏ திறந்து வைத்தார்

 

தாம்பரம், ஜூலை 14: தாம்பரம் மாநகராட்சி, 19வது வார்டு பகுதிகளில் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.13 லட்சத்தில் புதிய நியாய விலைக்கடை, ரூ.50 லட்சத்தில் புதிய நூலகம், காசிவிசாலாட்சிபுரம், வைகை தெருவில் ரூ.29.70 லட்சத்தில் சிறுவர் பூங்கா ஆகியவை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

இவற்றை பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, பகுதி செயலாளர் இ.எஸ்.பெர்னாட், வட்டச் செயலாளர் சிலம்பரசன், மாமன்ற உறுப்பினர் பிருந்தா தேவி, அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ரூ.92.70 லட்சம் மதிப்பில் நியாய விலை கடை நூலகம், சிறுவர் பூங்கா: இ.கருணாநிதி எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : price shop ,E. Karunanidhi ,MLA ,Thambaram ,Ballavaram ,MLA EA ,Tambaram Municipality ,Ghasivisalachsipuram, Vaigai Street ,Fair Price Shop Library, Children's Park ,Dinakaran ,
× RELATED கனமழை காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.13.35 கோடி ஒதுக்கீடு