புதிய தங்க முலாம் பூசிய கலசத்தில் கும்பாபிஷேகம்

 

வில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலையில், புகழ்பெற்ற சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. தென் திருப்பதி என அழைக்கப்படும் இக்கோயிலுக்கு அதிகளவில், தமிழகத்தி பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு சீனிவாச பெருமாள் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக புதிதாக தங்கம் முலாம் பூசப்பட்ட கலசமும் தயார் நிலையில் உள்ளது. கலசங்கள் விமானத்தில் பொருத்தப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள உள்ளனர். கும்பாபிஷேக விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்காக ஆண்டாள் கோயில் நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

The post புதிய தங்க முலாம் பூசிய கலசத்தில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: