×

ஆடுகள் பலியாவதை தடுக்க தெரு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு முகாம் நடத்த வலியுறுத்தல்

 

அவிநாசி, ஜூலை 14: தெரு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு முகாம்கள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை முகாம் அவிநாசி அருகே நடுவச்சேரியில் நேற்று நடைபெற்றது. இதில் விவசாயிகள் சார்பில் விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:முறைகேடு ஏற்படுவதைத் தடுக்க சொட்டுநீர் மானியத்தை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், தெருநாய்கள் கடித்து அதிக அளவில் ஆடுகள் பலியாவதை கட்டுப்படுத்த மாதந்தோறும் சுழற்சி முறையில் கிராமப்புற கால்நடை பராமரிப்பு துறை மருந்தகங்களில் தெரு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு முகாம்கள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், தோட்டக்கலை, வேளாண்மை, உழவர் நலத் துறை, பட்டு வளர்ச்சித் துறை உள்ளிட்டவை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு விதமான மானிய தொகைகள் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆண்டுக் கொருமுறை உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் நீர்த்தேக்க தொட்டிக்கான மானியத்தை எந்த மாற்றமின்றி தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். என்று குறிப்பிட்டிருந்தனர்.

 

The post ஆடுகள் பலியாவதை தடுக்க தெரு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு முகாம் நடத்த வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Avinashi ,Agriculture and Farmers Welfare Department ,Naduvecherry ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...