தொண்டி, ஜூலை 14: தொண்டி அருகே வீட்டின் பீரோவை திறந்து 21 பவுன் நகையை திருடியதாக வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தொண்டி அருகே உள்ள பனஞ்சாயல் கிராமத்தை சேர்ந்தவர் விஜயன்(59). இவரது மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். மகள் சென்னையில் வசித்து வருகிறார். விஜயன், மனைவியுடன் பனஞ்சாயலில் வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டில் 20 வயது உறவுக்கார வாலிபர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்த போது, நெக்லஸ், மோதிரம், செயின் உட்பட 21 பவுன் நகை காணாமல் போனது அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து எஸ்பி.பட்டினம் போலீசார் தீவிர விசாரனை செய்து வருகின்றனர்.
The post 21 பவுன் நகை திருட்டு appeared first on Dinakaran.
