- கோபி?. திருக்குறள்
- கரட்டூர்
- நல்லகவுண்டன்பாளையம்
- நஞ்சகவுண்டன்பாளையம்
- கரத்தாடிபாளையம்
- லா.கள்ளிப்பட்டி
- வெள்ளங்காட்டு பாளையம்
- கலிங்கியம்
- தின மலர்
கோபி, ஜூலை 14: கோபி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்தது.கோபி மற்றும் அதைச்சுற்றி உள்ள கரட்டூர், நல்லகவுண்டன்பாளையம், நஞ்சகவுண்டன்பாளையம், கரட்டடிபாளையம், ல.கள்ளிப்பட்டி, வெள்ளாங்காட்டு பாளையம், கலிங்கியம், நாகர்பாளையம், மொடச்சூர், வடுகபாளையம், மேட்டுவலுவு, புதுப்பாளையம், நாயக்கன்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென கோபி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் கனமழை பெய்தது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கோபி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வெயிலின் தாக்கம் கனிசமாக குறைந்து குளிர் காற்று வீசியது. அதே போன்று தற்போது தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில் நடவு பணிகள் நடைபெற்று வருகிறது. கனமழை காரணமாக வயல்களில் மழைநீர் தேங்கியதால் விவசாயகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
The post கோபி சுற்றுவட்டாரத்தில் கொட்டி தீர்த்த கனமழை appeared first on Dinakaran.

