ஆலந்தூர்: ஆதம்பாக்கம் மேடவாக்கம் பிரதான சாலையில் சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு நேற்று முன்தினம் காலை இந்த சூப்பர் மார்க்கெட்டின் கேஷியர் கடையை திறக்க வந்த போது, ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் லட்சுமி குமாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் விரைந்து வந்து பார்த்தபோது, கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.1.50 லட்சம் திருரு போனது தெரிந்தது. இதுகுறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், அந்த கடையில் சேல்ஸ்மேனாக வேலை பார்க்கும் ஆதம்பாக்கம், ஏரிக்கரை தெருவை சேர்ந்த ராஜா மாரிமுத்து தினேஷ் (27), என்பவர் ஷட்டரின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணத்தை திருடியது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் செல்போன் டவர் சிக்னல் மூலமாக பூந்தமல்லியில் பதுங்கி இருந்த ராஜா மாரிமுத்து தினேஷை நேற்று கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post ஆதம்பாக்கத்தில் பூட்டை உடைத்து சூப்பர் மார்க்கெட்டில் ரூ.1.50 லட்சம் திருட்டு: சேல்ஸ்மேன் கைது appeared first on Dinakaran.
