மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் சுகாதார ஆய்வக சேவை

*திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் முதல்வர் தொடங்கி வைத்தார்

மன்னார்குடி : மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கினைந்த பொது சுகாதார ஆய்வகத்தை முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை 354 படுக் கை வசதிகளுடன் இயங்கி வருகிறது. தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோ யாளிகள் புற நோயாளிகளாகவும், 350 க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் நோ யாளிகளாகவும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். சராசரியாக மாதந்தோறும் 300-க்கும் மேற் பட்ட மகப்பேறு சிகிச்சைகள் 100க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பரிந்துரையின் பேரில் மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் ஒருங்கினைந்த பொது சுகாதார ஆய்வகம் புதிதாக கட்டப்பட்டது. இந்த ஆய்வகத்தை திருவாரூரில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் கைலாசம், தலைமை மருத்துவர் விஜயகுமார் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தனர்.

ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகத்தில் உள்ள வசதிகள் குறித்து மருத் துவமனை தலைமை கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் மற்றும் நுண்ணு யிரியல் துறை மருத்துவர் டாக்டர் முத்தரசி ஆகியோர் கூறியது, இந்தஆய்வ கத்தில் தொற்று நோய்களான டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா, எலிக்காய்ச்சல், டைபாய்டு, மஞ்சள் காமாலை பி மற்றும் சி வைரஸ், எச்ஐவி மற்றும் இதர பால்வினை நோய்கள், காசநோய் கண்டறியும் பரிசோதனை, கொரோனா, சிறுநீர் தொற்று உள்ளிட்ட பல்வேறு நோய்கள் குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

அதுபோல், தொற்று அல்லாத நோய்களான சர்க்கரை மற்றும் உப்பு அளவு, கொழுப்பு, முடக்கு வாதங்கள் அறியும் பரிசோதனை, முதுகு தண்டுவட திரவ பரிசோதனை, ரத்தத்தில் உள்ள அமைலேஸ் அளவு , கட்டி மற்றும் அசாதா ரண திசுக்கள் மாதிரிகளை சேகரித்து அதன் தன்மையை கண்டறிதல், ரத்த அளவு தட்டனுக்கள், வெள்ளை அணுக்கள், சிகப்பு அணுக்கள் அளவு குறித்து பரிசோதனை மற்றும் தைராய்டு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா மருத்துவமனைகள்,

மேம் படுத்தப்பட்ட ஆரம்ப மற்றும் கூடுதல் சுகாதார நிலையங்களிலிருந்து நோயாளிகளின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மருத்துவமனை பணியாளர் மூலம் இந்த ஆய்வகத்துக்கு கொண்டு வந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

பின்னர், நோயாளிகளை அலைக்கழிக்காமல் பரிசோதனை அறிக்கைகள் இணைய மூலமாக உடனுக்குடன் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பப்படும் என்றனர்.திருவாரூர் மாவட்டத்தில் முதல்முறையாக மன்னார்குடியில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் துவங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் சுகாதார ஆய்வக சேவை appeared first on Dinakaran.

Related Stories: