பாலக்கோடு அருகே கோயில் நிலம் குத்தகை ஏலம்

பாலக்கோடு : தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அடுத்த வேப்பிலைஅள்ளி கிராமத்தில், செல்லியம்மன் – சாக்கியம்மன் சூத்திரகரகம் கோயிலுக்கு பாத்தியப்பட்ட 42 ஏக்கரர் பரப்பில் தென்னை, மா, புளிய மரங்கள் மற்றும் புன்செய் நிலம், பொது ஏலம் இந்து சமய அறநிலைய துறை ஆய்வாளர் துரை தலைமையில் நேற்று நடந்தது.

பரம்பரை அறங்காவலர் சிவகுமார் முன்னிலையில், ஆய்வாளர் துரை கண்காணிப்பில் மாமரங்கள் 98,600 ரூபாய்க்கும், தென்னை மரங்கள் ரூ.7,600க்கும், புளிய மரங்கள் ரூ.9,100க்கும், புன்செய் நிலங்கள் 55 ஆயிரம் என மொத்தம் ரூ.1.70 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர்.

இந்த குத்தகைகாலமானது ஒரு வருடத்திற்கு மட்டும் எனவும், ஏலம் எடுத்தவர்கள் தங்களது சொந்த செலவில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு மகசூலை அனுபவித்து கொள்ள உரிமை உடையவர்கள் எனவும், குத்தகை காலம் முடிந்த பின்னர் நிலம் மற்றும் அதிலுள்ள மரங்களை எவ்வித சேதமின்றி ஒப்படைக்கவும், நிரந்தர கட்டுமானங்கள் மேற்கொள்ளக் கூடாது என ஆய்வாளர் துரை அறிவுறுத்தினார். ஏலத்தில் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

The post பாலக்கோடு அருகே கோயில் நிலம் குத்தகை ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: