அரசு ஆதி திராவிடர் நல பள்ளியில் இலவச சிறப்பு வழிகாட்டி புத்தகங்கள்

 

பெரம்பலூர், ஜூலை 11: இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச சிறப்பு வழிகாட்டி புத்தகங்கள் வழங்கப்பட்டன.
பெரம்பலூர் மாவட்டம் இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நேற்று (10ம் தேதி) பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச சிறப்பு வழிகாட்டி புத்தகங்கள் வழங்கப்பட்டன. இவற்றை பள்ளித் தலைமை ஆசிரியர் மாயக் கிருஷ்ணன் வழங்கினார். நிகழ்ச்சியின் போது பள்ளி ஆசிரியர்கள் உடனிருந்தனர். தமிழ்நாடு அரசு ஆதி திராவிடர் நலத் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ,மாணவிகள் பொதுத் தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக சிறப்பு வழிகாட்டி புத்தகங்கள் அனைத்து பாடங்களுக்கும் வழங்கப் பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

The post அரசு ஆதி திராவிடர் நல பள்ளியில் இலவச சிறப்பு வழிகாட்டி புத்தகங்கள் appeared first on Dinakaran.

Related Stories: