ஆன்லைன் ரம்மியால் கடன் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

 

அவனியாபுரம், ஜூலை 11: மதுரை வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி(42). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, அவரது மனைவி ரதிப்பிரியா அளித்த புகாரின் பேரில், அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது முத்துப் பாண்டி மது பழக்கம் மற்றும் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி இருந்துள்ளார். ஆன்லைன் ரம்மியால் அவர் செல்போன் செயலிகள் மூலம் அதிக அளவில் கடனும் பெற்றுள்ளார். வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால சிரமப்பட்டு வந்த அவர், தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

The post ஆன்லைன் ரம்மியால் கடன் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: