பவானி, ஜூலை 11: பவானி, காலிங்கராயன்பாளையம், எலவமலை, குருப்பநாயக்கன் பாளையம், ஊராட்சிக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக சென்றன. பவானி அரசு ஆஸ்பத்திரி, சோமசுந்தரபுரம் செல்லும் சாலையில் சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பால் மழைநீர் வெளியேற வழியில்லாமல் வீதிகளில் தேங்கியது. இதேபோல், மீனாட்சி கல்யாண மண்டப வீதியிலும் மழைநீர் வீதிகளில் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில் நேற்று மாலை பெய்த குளிர்ச்சியான சூழல் நிலவியது.
The post பவானி பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை appeared first on Dinakaran.

