ேசலம், ஜூலை 11: சேலம் சொர்ணபுரி (எஸ் 866) கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் பாதுகாப்பு பெட்டக திறப்பு விழா மற்றும் நகை கடன் துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை மற்றும் சர்க்கரை துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்துகொண்டு, பாதுகாப்பு பெட்டக அறையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் ஊழியர் அசோசியேசன் மாநில பொதுச் செயலாளர் முருகேசன் முதலாவது நகைக்கடனை வழங்கி, நகை கடன் வழங்கும் விழாவை துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு சேலம் மண்டல துணைப்பதிவாளர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். செயலாட்சியர் ரேவதி, கூட்டுறவு சார்பதிவாளர் உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் ஊழியர் அசோசியேசன் மாநில பொருளாளர் மோகன்குமார் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக, சங்க செயலாளர் வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார். சங்கத்தின் எழுத்தர் மைத்ரேயன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தினர், திமுகவினர் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இச்சங்கத்தில் ஏற்கனவே 6 மனை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது செட்டிசாவடி கிராமத்தில் 267 மனைகள் கொண்ட மிகப்பெரிய மனைத் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
The post கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் பாதுகாப்பு பெட்டக திறப்பு விழா appeared first on Dinakaran.
