×

ரூ.68 லட்சம் மதிப்பில் சாலை அமைக்க பூமி பூஜை

இளம்பிள்ளை, ஜூலை 11: மகுடஞ்சாவடி தெற்கு ஒன்றிய திமுக அலுவலகம் திறப்பு விழா, சுப்பிரமணிய சுவாமி கோயில் தேர் பணி ஆய்வு மற்றும் உலகப்பனூரில் தார்சாலை அமைக்க பூமி பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. இதில் டி.எம்.செல்வகணபதி எம்பி கலந்து கொண்டு, கட்சி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து மகுடஞ்சாவடி சுப்பிரமணிய சுவாமி கோயில் தேர்பணி பார்வையிட்டு, நபார்டு திட்டத்தின் கீழ் உலகப்பனூர் முதல் சந்தைப்பேட்டை வரை ரூ.68 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். மகுடஞ்சாவடி தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் அன்பழகன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் தங்கமுத்து, துணை செயலாளர்கள் சுந்தரம், சம்பத்குமார், இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், மாணவர் அணி அமைப்பாளர் கண்ணன், வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் பச்சமுத்து, ஒன்றிய அவைத்தலைவர் அய்யாவு, பொருளாளர் புஷ்பநாதன், இடங்கணசாலை நகர செயலாளர் செல்வம், நகராட்சி தலைவர் கமலக்கண்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post ரூ.68 லட்சம் மதிப்பில் சாலை அமைக்க பூமி பூஜை appeared first on Dinakaran.

Tags : Bhoomi Pooja ,Ilampillai ,Magudanjavady South Union DMK ,Subramania Swamy Temple ,Ulagapanur ,D.M. ,Selvaganapathy ,Bhoomi ,Pooja ,
× RELATED பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி தஞ்சம்