ஆர்எம் அலுவலகம் அருகே பழைய பென்ஷன் திட்டம் கோரி எஸ்ஆர்எம்யூ ஆர்ப்பாட்டம்

 

திருச்சி, ஜூலை 10: எஸ்ஆர்எம்யூ அமைப்பு சார்பில் திருச்சி ரெயில்வே கோட்டம் மற்றும் பொன்மலை பணிமனை கோட்டம் சார்பில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. எஸஆர்எம்யூ துணை பொது செயலாளர் வீரசேகரன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக தொழிற்சங்கங்களுக்கு சாதகமான சட்டங்களை மாற்றி தொழிலாளர்கள் விரோத, நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை வாபஸ் பெற வேண்டும்,

2023 முதல் வழங்க வேண்டிய சிஆர்சி பதவி உயர்வுகளை அனைத்து பிரிவினருக்கும் காலம் தாழ்த்தாமல் உடனே வழங்கிட வேண்டும், 8வது ஊதிய குழுவை உடனே அமைக்க வேண்டும், சம்பள கமிஷன்கள் மூலமாக ஓய்வூதிய நிர்ணய முறையை உறுதி செய்திட வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ரயில்வே தனியார் மயம், அவுட்சோர்சிங் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

The post ஆர்எம் அலுவலகம் அருகே பழைய பென்ஷன் திட்டம் கோரி எஸ்ஆர்எம்யூ ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: