சின்னசேலம், ஜூலை 10: பெரம்பலூர் மாவட்டம் வீ.களத்தூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி(63). இவர் கடந்த 7ந்தேதி காலை மேல்நாரியப்பனூரில் உள்ள தனது அக்கா மகனுக்கு பெண் பார்த்துவிட்டு மீண்டும் மாலை 5 மணியளவில் அம்மையகரத்தில் உள்ள கடை அருகே வந்தார். அப்போது பின்னால் வந்த கார் அதிவேகமாக வந்து முதியவர் மீது மோதியது. இந்த விபத்தில் முதியவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளித்து பின் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய கார் உரிமையாளர் சென்னையை சேர்ந்த தர்மலிங்கம் என்பவர் மீது படுகாயம் அடைந்த கோவிந்தசாமி சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து கார் உரிமையாளர் தர்மலிங்கம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கார் மோதி முதியவர் காயம் appeared first on Dinakaran.
