ராமநத்தம் அருகே நெடுஞ்சாலையில் லாரி மீது ஆம்னி பஸ் மோதி 10 பேர் படுகாயம்

திட்டக்குடி, ஜூலை 10: சென்னையில் இருந்து லாரி ஒன்று அரியலூர் பகுதியில் உள்ள சிமெண்ட் ஆலைக்கு சிமெண்ட் ஏற்ற சென்று கொண்டிருந்தது. ராமநத்தம் அடுத்த வெங்கனூர் தேசிய நெடுஞ்சாலை அருகே நேற்று அதிகாலை வந்த போது, சென்னையில் இருந்து முதுகுளத்தூருக்கு 25 பயணிகளுடன் சென்ற ஆம்னி பேருந்து லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த பழனியாண்டி மனைவி சுமித்ரா(34), காரைக்குடி பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் ஆறுமுகம் (25), பரமக்குடியை சேர்ந்த மோதிலால் மகன் சபரிஹரி வாசன்(27), சிவகங்கையை சேர்ந்த விஸ்வநாதன் மனைவி ஹேமலதா(55) உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர். இதை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் இதுகுறித்து ராமநத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், போலீசார் மற்றும் நெடுஞ்சாலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மற்ற பயணிகளை மாற்று பேருந்து மூலம் அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

The post ராமநத்தம் அருகே நெடுஞ்சாலையில் லாரி மீது ஆம்னி பஸ் மோதி 10 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: