கார்-டூவீலர் மோதி பஸ் கண்டக்டர் பலி

பரமக்குடி, ஜூலை 10: சத்திரக்குடி அருகே கார் – டூவீலர் நேருக்கு நேர் மோதிய விபத்தில் அரசு பஸ் தற்காலிக கண்டக்டர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் காயமடைந்தனர். சத்திரக்குடி அருகே நெடியமாணிக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மதன்குமார் (23). முதுகுளத்தூர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக கண்டக்டராக பணியாற்றி வந்தார். நேற்று தனது டூவீலரில் பரமக்குடியில் இருந்து சத்திரக்குடி நோக்கி வந்துகொண்டிருந்தார். சத்திரக்குடி அருகே வந்தபோது ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடி நோக்கி சென்றுகொண்டிருந்த காரும், டூவீலரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் மதன்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும், காரில் இருந்த 5 பேர் சிறிய காயங்களுடன் தப்பினர். அவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த விபத்து குறித்து சத்திரக்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

The post கார்-டூவீலர் மோதி பஸ் கண்டக்டர் பலி appeared first on Dinakaran.

Related Stories: