இதுகுறித்து, தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “பொது வேலைநிறுத்தத்தில் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க கூடாது. மீறி பங்கேற்றால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையுடன், நோ வொர்க், நோ பே என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படாது” என்றும் தெரிவித்திருக்கிறார். அதன்படி, சென்னை தலைமை செயலகம், எழிலகம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் 98 முதல் 99 சதவீதம் பேர் நேற்று பணிக்கு வந்திருந்தனர். ஒரு சிலர் உடல்நிலை சரியில்லாமல் மற்றும் ஏற்கனவே விடுப்பில் இருந்தவர்கள் மட்டும் பணிக்கு வரவில்லை. அரசு அலுவலகங்களில் எந்த தடையும் இல்லாமல் பணிகள் நடைபெற்றதாக மனிதவள மேலாண்மை துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
The post பொது வேலைநிறுத்தத்தில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் பங்கேற்கவில்லை: 99 சதவீதம் பேர் பணிக்கு வந்திருந்தனர் appeared first on Dinakaran.
