எனவே கரையோரம் பல்வேறு தேயிலை எஸ்டேட்களை சேர்ந்த தேயிலை தோட்டங்களை நீர் சூழ்ந்து உள்ளது. சோலையார் அணை நிரம்பி உள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. ஆர்ப்பரித்து செல்லும் நீரை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகமாக உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 1703 கன அடி நீர் வரத்து உள்ளது. அணையின் நீர்த்தேக்க நீர்மட்டமான 160 அடி நீர்மட்டம் உள்ளது. அணையில் இருந்து சோலையார் அணை மின் நிலையங்கள் இயக்கப்பட்டு பரம்பிக்குளம் அணைக்கு 800 கன அடி நீரும், கேரளா சோலையார் அணைக்கு 635 கன அடி நீரும் செல்கிறது. அணையில் 5402 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
The post சோலையார் அணை பகுதியில் குவியும் சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.
