பெரம்பலூர், ஜூலை 9: பெரம்பலூரில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கம் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன், மாவட்ட தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கம் சார்பில், ஃபீல்டு அசிஸ்டெண்ட் பதவிக்கு அவுட்சோர்சிங் ஒப்பந்த முறையில் பணி செய்து வருபவர்களுக்கு, மேலும் 3 வருடங்கள் பணி நீட்டிப்பு என்ற அரசாணை எண் 420ஐ ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் உமா சந்திரன் தலைமை வகித்தார். இதில் 3 பெண்கள் உள்பட 20 பேர் கலந்து கொண்டனர்
The post பெரம்பலூரில் நில அளவை அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
