கோபி, ஜூலை 9: கோபி அருகே உள்ள பா.வெள்ளாளபாளையம் ஊராட்சி, பவளமலை பிரிவில் இருந்து எஸ்.பி.நகர் சந்திப்பு வரை பலரும் வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து காம்பவுண்ட் சுவர் அமைத்தும், வேலி அமைத்தும் பயன்படுத்தி வந்தனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றிட பலமுறை வருவாய்த்துறையினர் அறிவிப்பு செய்தும் ஆக்கிரமிப்பை அகற்ற யாரும் முன்வரவில்லை. அதனால் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் ஜேசிபி மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது.கோபி தாசில்தார் சரவணன் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தலைமையில் பொக்லைன் வாகனம் மூலமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
The post பவளமலை பகுதியில் வருவாய்த்துறை நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் appeared first on Dinakaran.

