தொழில் முதலீட்டில் தமிழ்நாடு முதலிடம்: அமைச்சர் பெருமிதம்

சென்னை: தொழில் முதலீட்டில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபிறகு, தொழில்மயமாக்கலில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனிக்கவனம் செலுத்தி பல்வேறு நிகழ்ச்சிகளை தலைமையேற்று நடத்தி வருகிறார்.

பன்னாட்டு நிறுவனங்கள் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக நம்பகமான உயர்தர குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் சூழலை தமிழகம் கொண்டுள்ளது. பெருந்தொழில் வளர்ச்சிக்கான சிறந்த இடமாகவும் தமிழகம் உள்ளது. அதிலும் திறமையான பணியாளர்கள் கிடைப்பதை உறுதி செய்வதன் அவசியத்தை உணர்ந்து, மாநிலத்தின் மனித மூலதனத்தை வலுப்படுத்த பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இதனால் உயர் மதிப்புள்ள மற்றும் அதிக அளவிலான வேலைவாய்ப்புள்ள துறைகளில் பட்டதாரிகள் மற்றும் வேலை தேடும் இளைஞர்களுக்கு கிடைக்கப்பெறுகிறது. இந்நிலையில் கடந்த ஆட்சியில் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் தொழில் தொடங்க பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் தொழில் முதலீட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியிருப்பதாவது : கடந்த ஆட்சியில் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் தொழில் தொடங்க பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. குஜராத், மராட்டிய மாநிலங்கள் பட்டியலில் 2 மற்றும் 3வது இடங்களில் உள்ளன. தொழில் முதலீட்டில் தமிழ்நாடு முதலிடம். நாட்டிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

உலகளவில் தொழில் முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டை தேர்வு செய்கின்றனர். திராவிட மாடல் ஆட்சியில் தொழில் துறையில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. உலகளாவிய வாகனஉற்பத்தி நிறுவனங்கள் முதல் மின்சார வாகன நிறுவனங்கள் வரையும் பொறியியல் நிறுவனங்கள் முதல் மின்னணு சாதனங்கள் உற்பத்தி வரை அனைத்து நிறுவனங்கர்கள் தமிழ்நாட்டையே தேர்வு செய்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* ஏற்றுமதி தயார் நிலையில் தமிழ்நாடு முதலிடம்
* தோல் பொருள்கள் ஏற்றுமதி மற்றும் ஜவுளித் துணிகள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்
* பெண் காவல் அதிகாரிகளைக் கொண்டுள்ளதில் தமிழ்நாடு முதலிடம்
* இந்திய அளவில் காலணிகள் மற்றும் தோல் பொருள்கள் தயாரிப்பில் தமிழ்நாடு முதலிடம்
* அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம்
* அதிக எண்ணிக்கையில் சதுப்பு நிலங்கள் கொண்டுள்ள மாநிலம் தமிழ்நாடு
* வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முதலிடம்
* இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் செயல்படும் தொழிற்சாலைகளில் தமிழ்நாடு முதலிடம்
* இந்தியாவிலேயே அதிக தொழிலாளர்களை கொண்டுள்ளதில் தமிழ்நாடு முதலிடம்
* தொழிற்சாலைகளில் பணிபுரியும் அதிக பெண் தொழிலாளர்களை கொண்டுள்ளதில் தமிழ்நாடு முதலிடம்
* அதிகத் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளதில் தமிழ்நாடு முன்னணி மாநிலம்.
* உலகளாவிய திறன் மையங்களில் மும்பை, புனே, ஐதராபாத், பெங்களூரூ முதலான நகரங்களைவிட சென்னை 24.5 சதவிகித வளர்ச்சியுடன் 94,121 திறன் மையங்கள் கொண்டு இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
* தற்போது தொழில் முதலீட்டில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

The post தொழில் முதலீட்டில் தமிழ்நாடு முதலிடம்: அமைச்சர் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: