வாழப்பாடி, ஜூலை 9: பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏத்தாப்பூரில், பேரூராட்சி தலைவர் காசி அன்பழகன் தலைமையில், பல்வேறு பணிகளுக்கான பூமி பூஜை போடப்பட்டது. ஏத்தாப்பூரில் ரூ. 14.30 லட்சம் மதிப்பில் சாக்கடை கால்வாய் மேம்பாட்டு பணிக்காக பூமி பூஜை நடந்தது. பேரூராட்சி தலைவர் காசி அன்பழகன் தலைமை வகித்தார். இதில் வார்டு கவுன்சிலர் சரவணன், பெத்தநாயக்கன்பாளையம் மத்திய ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் காசி சுரேஷ் குமார், ஜோதி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏத்தாப்பூர் பேரூராட்சி 11வது வார்டு சுப்பராயன் கோயிலை சுற்றியும் கான்கிரீட் தளம் அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. நிகழ்ச்சியில் ஏத்தாப்பூர் பேரூராட்சி தலைவர் காசி அன்பழகன், கவுன்சிலர் சரவணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் காசி சுரேஷ்குமார், அர்ஜூனன், தாமோதரன், ஆனந்தகுமார், மணி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post கான்கிரீட் தளம், சாக்கடை கால்வாய் கட்ட பூமி பூஜை appeared first on Dinakaran.
