விதிமீறும் பயணங்களால் ஆபத்து

 

தொண்டி, ஜூலை 8: தொண்டி மற்றும் சுற்றுவட்டார படுதிகளில் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றுவது, சிறுவர்கள் டூவீலர்கள் ஓட்டுவது என விதிமீறல்கள் தொடர்கிறது. போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.தொண்டி, நம்புதாளை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் போக்குவரத்து விதிமுறைகள் முற்றிலும் கடைபிடிக்காமல் வாகனங்கள் செல்கிறது. சரக்கு வாகனங்களில் அளவுக்கு அதிகமாக பொருள்களை ஏற்றிச்செல்கின்றனர். இதுபோல் அனுமதித்த ஆட்களை விட அதிகமான ஆட்களை வேன் உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றிச் செல்வதை தினமும் பார்க்க முடிகிறது.

விபத்து ஏற்படும் பட்சத்தில் உயிர் சேதம் அதிகம் ஏற்படுகிறது. இதேபோல் போக்குவரத்து விதிமுறைகள் எதுவுமே தெரியாமல் டூவீலர்களை சிறுவர்கள் அதிகளவில் ஓட்டுகின்றனர். அதிவேகமாக ஒரு கட்டுப்பாடு இல்லாமல் ஓட்டுவதால் எதிரே வரும் வாகனமும் விபத்தில் சிக்குகிறது. அதனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தொண்டி காதர் கூறியது,‘சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றுவதே தவறு. அதிலும் அதிக ஆட்களை ஏற்றிச் செல்கின்றனர். இதேபோல் வேன்களில் அனுமதித்த ஆட்களை விட அதிக ஆட்களை ஏற்றிச் செல்கின்றனர். அதனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

The post விதிமீறும் பயணங்களால் ஆபத்து appeared first on Dinakaran.

Related Stories: