×

மஞ்சூர் பிக்கட்டியில் திமுக அரசின் சாதனை விளக்க பிரசார கூட்டம்

 

மஞ்சூர், ஜூலை 8: மஞ்சூர் அருகே பிக்கட்டியில் திமுக அரசின் 4 ஆண்டுகள் சாதனை விளக்க பிரசார கூட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே உள்ள பிக்கட்டியில் ஊட்டி தெற்கு ஒன்றியம் (கிழக்கு) திமுக சார்பில் முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் 102வது பிறந்தநாள் விழா மற்றும் திமுக அரசின் 4 ஆண்டுகள் சாதனை விளக்க பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் பரமசிவன் தலைமை தாங்கினார்.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இமயம் சசிகுமார், துணை அமைப்பாளர் பாபு, நாகராஜ், கீழ்குந்தா பேரூராட்சி கழக செயலாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரபு வரவேற்றார். இதில், சிறப்பு பேச்சாளர்கள் சுகன்மந்திரன், தமிழ்பிரியன் ஆகியோர் கலந்துகொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி மக்களுக்கான ஆட்சியாக உள்ளது. இந்த 4 ஆண்டுகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் முதல் அனைத்து தரப்பு மக்களுக்கும் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே மீண்டும் மக்களுக்கான திராவிட மாடல் ஆட்சி அமைய வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் கழக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியதைபோல் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்றார்கள்.

கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதி சந்திரன், சத்தியநாதன், மகளிர் அணி விஜயலட்சுமி மற்றும் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள், நிர்வாகிகள், விளையாட்டு அணி நிர்வாகிகள், நவீன், பாலன், திருப்பதி, நாராயணன், சிவக்குமார், லூயிஸ், ராமு, பரத்குமார், ஹரி, குரு, ராகுல் மற்றும் பிக்கட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

The post மஞ்சூர் பிக்கட்டியில் திமுக அரசின் சாதனை விளக்க பிரசார கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK government ,Manjoor Pikkatti ,Manjoor ,Pikkatti ,Chief Minister ,Ooty South Union ,East ,DMK ,Manjoor, Nilgiris district… ,Dinakaran ,
× RELATED குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப்பண்ணையில் 3...