மதுரை: நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்தை கண்டித்து திருப்புவனம் சந்தை திடலில் இன்றுஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில், சீமான் பங்கேற்கிறார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மானாமதுரை டிஎஸ்பி அனுமதி மறுத்துள்ளார். எனவே, ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக உடனடியாக விசாரிக்க வேண்டுமென நீதிபதி பி.புகழேந்தி முன் நேற்று முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்று நீதிபதி மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். அப்போது அரசுத் தரப்பில், அஜித்குமார் விவகாரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த நாம் தமிழர் கட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டு, ஆர்ப்பாட்டமும் நடைபெற்றுள்ளது என கூறப்பட்டது.
இதைக் கேட்டு கோபமடைந்த நீதிபதி, ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை என கூறியதால் தான் அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி சார்பில் ஏற்கனவே ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளீர்கள்? அதை மறைத்து ஏன் மீண்டும் முறையீடு செய்தீர்கள். ஒவ்வொரு வாரமும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்பீர்கள். அதற்கு காவல்துறை பாதுகாப்பு கொடுத்து அனுமதிக்க முடியுமா?. கடந்த வாரம் தானே ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளீர்கள்,?அதற்குள் என்ன அவசரம் என கேள்வி எழுப்பிய நீதிபதி, மனுவிற்கு போலீசார் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.
The post ஏற்கனவே போராட்டம் மறைத்து முறையீடு வாரம் தோறும் ஆர்ப்பாட்டமா? நாதகவுக்கு ஐகோர்ட் கண்டனம் appeared first on Dinakaran.