வேலூர், ஜூலை 8: வேலூர் மாவட்டத்தில் 46 ஆயிரம் வீடுகளுக்கு காய்கறி, பழச்செடிகள் தொகுப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டு உள்ளதாகவும், மாடித் தோட்டம் அமைப்பவர்களும் பயன்பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். காய்கறி விதை தொகுப்பு தமிழ்நாடு அரசு சார்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் சார்பில் பயறு வகை கள் விதை தொகுப்பு, காய்கறி விதைகள் தொகுப்பு மற்றும் பழச்செடிகள் தொகுப்பு 100 சதவீத மானியத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையின் மூலமாக வினியோகம் செய்யும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ.67 மதிப்புள்ள பயறு வகைகள் விதை தொகுப்பில் மர துவரை, காராமணி மற்றும் அவரையும், ரூ.60 மதிப்புள்ள காய்கறி விதைகள் தொகுப் பில் தக்காளி, கத்திரி, மிள காய், வெண்டை, கீரை வகை கள், கொத்தவரையும் ளது. ரூ.100 மதிப்புள்ள செடிகள் தொகுப்பில் பாளி, கொய்யா எலுமிச்சை உள்ளது. தொகுப்புகள் தோட்டக்கலைத்துறையின் மூலம் வழங்கப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம். அதேபோல் தோட்டம் வைத்துள்ளவர்கள், மாடித்தோட்டம் வைத்துள்ளவர்கள், வைக்க விரும்புபவர்களும் இத்திட்டத்தின் கீழ் ஆதார் எண், ரேஷன் கார்டு ஆகிய ஆவணங்களின் நகல்களை கொடுத்து பதிவு செய்து பயன்பெறலாம். வேலூர் மாவட்டத்தை பொருத்தவரையில் காய்கறி விதை பழச் தொகுப்புகள் 26 ஆயிரம் வீடுகளுக்கும், பழச்செடிகள் மற்றும் தொகுப்பு 16,450 வீடுகளுக்கும், பயறு வகை விதை தொகுப்புகள் சுமார் 4 ஆயிரம் வீடுகளுக்கும் என மொத்தம் 46 ஆயிரத்து 450 வீடுகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post 46 ஆயிரம் வீடுகளுக்கு காய்கறி விதை பழச்செடிகள் தொகுப்பு வழங்க இலக்கு மாடித்தோட்டம் அமைப்பவர்களும் பயன்பெறலாம் வேலூர் மாவட்டம் முழுவதும் appeared first on Dinakaran.
