சர்வதேச கூட்டுறவு ஆண்டு பயிற்சி பட்டறை

செங்கல்பட்டு: காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், மறைமலைநகரில் aஉள்ள தென்மேல்பாக்கம் நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025 பயிற்சி பட்டறை மற்றும் கருத்தரங்கம் நடந்தது. செங்கல்பட்டு மண்டல இணைப்பதிவாளர் வி.நந்தகுமார் தலைமை தாங்கி பேசினார். தொடர்ந்து, சிங்கப்பெருமாள் கோவில் நகர கூட்டுறவு கடன் சங்கத்தின் மறைமலைநகர் கிளையில் மரக்கன்று இணைப்பதிவாளர் வி.நந்தகுமார் நட்டார். இந்நிகழ்ச்சியில் துணைப்பதிவாளர்கள் உமாசங்கரி(செங்கல்பட்டு சரகம்), செல்வி(மதுராந்தகம் சரகம்) கண்காணிப்பாளர் வேணுகோபால் மற்றும் அனைத்து கூட்டுறவு சார் பதிவாளர்கள், கள அலுவலர்கள், சங்க செயலாளர்கள், பணியாளர்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post சர்வதேச கூட்டுறவு ஆண்டு பயிற்சி பட்டறை appeared first on Dinakaran.

Related Stories: