வாடிப்பட்டி, ஜூலை 5: வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை மீனாட்சி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன் கார்த்திகேயன் (27). விவசாயக் கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் பல்வேறு இடங்களில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் கார்த்திகேயன் மன உளைச்சலுடன் இருந்து வந்துள்ளார். இதனால் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வாடிப்பட்டி போலீசார் அவரது உடலை கைப்பற்றி வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகினறனர்.
The post கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.
