சென்னையில் இருந்து ஹாங்காங்கிற்கு 100 டன் சரக்குடன் புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு

சென்னை: சென்னையில் இருந்து ஹாங்காங்கிற்கு கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் கார்கோ விமானம் ஒன்று நேற்று முன்தினம் இரவு சுமார் 100 டன் சரக்குகளை ஏற்றிக் கொண்டு 5 விமான ஊழியர்களுடன் புறப்பட்டது. விமானம் சென்னை பழைய விமான நிலையத்தின் விமானம் நிற்கும் நடைமேடை 8ல் இருந்து புறப்பட்டு ஓடுபாதையில் ஓடத் தொடங்கியது. அப்போது அந்த விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார்.

இதையடுத்து விமானத்தை அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து இழுவை வாகனம் மூலம் ஓடுபாதையில் நின்ற கார்கோ விமானம் இழுத்துக்கொண்டு வரப்பட்டு மீண்டும் நடைமேடை 8ல் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. 2 மணி நேரத்தில் விமானத்தின் இயந்திரங்கள் சரி செய்யப்பட்டன. அதன் பின்பு அந்த கார்கோ விமானம் சென்னையில் இருந்து இரவு 10 மணி அளவில் ஹாங்காங்கிற்கு புறப்பட்டு சென்றது. இயந்திர கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த துரித நடவடிக்கையால் விபத்தில் இருந்து தப்பியதோடு 5 விமான ஊழியர்கள் சுமார் 100 டன் சரக்கு நல்வாய்ப்பாக தப்பியது.

 

The post சென்னையில் இருந்து ஹாங்காங்கிற்கு 100 டன் சரக்குடன் புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு appeared first on Dinakaran.

Related Stories: