×

பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி பெயின்ட் தயாரித்து விற்ற தொழிற்சாலைக்கு அதிரடி சீல்: 3 பேர் கைது

சென்னை: பிரபல பெயின்ட் நிறுவனத்தின் டெல்லி உதவி மேலாளர் தம்புசாமி என்பவர் சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவில் புகார் ஒன்று அளித்தார். அதில் ஏசியன் பெயின்ட் பிராண்டுகளை போல் போலியான பெயின்ட்களை தயாரித்து விற்பனை செய்யப்படுவதாகவும் எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார். அதன்பேரில் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது சென்னை ஐயப்பன்தாங்கல் அருகே உள்ள தண்டலம் பகுதியில் பிரபல பெயின்ட் நிறுவனத்தின் பெயரில் போலி பெயின்ட் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து அதிரடியாக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதியில் இயங்கி வந்த தொழிற்சாலைக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் தண்டலம் பகுதியை சோநத் பால்பாண்டி ஆரோக்கிசாமி மற்றும் சரவணன் ஆகியோர் பிரபல பெயின்ட் நிறுவனம் சார்பில் பெயின்ட் தயாரித்து சென்னை முழுவதும் பிரபல நிறுவனத்தின் ஏஜென்ட் என்ற பெயரில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.அதைதொடர்ந்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.73 லட்சம் மதிப்புள்ள போலி பெயிண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலி பெயின்ட் தயாரித்த தொழிற்சாலைக்கு சீல் வைக்ப்பட்டது.

The post பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி பெயின்ட் தயாரித்து விற்ற தொழிற்சாலைக்கு அதிரடி சீல்: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thambusamy ,Delhi ,Famous Paint Company ,Chennai Intellectual Property Enforcement Division ,Dinakaran ,
× RELATED சென்னை பல்லாவரத்தில் யூடியூபர்...