பொன்னமராவதி, ஜூலை 4: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில் கடந்த 12ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தொடர்ந்து மறுநாள் முதல் தினசரி சுவாமி சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, மண்டல பூஜைகள் நடைபெற்று வருகிறது. நேற்று 22வது நாளாக இந்த பூஜை நடைபெற்றது.
இந்த பூஜைகள் 48ம் நாள் மண்டலாபிஷேகம் வரை நடைபெறும். இந்த பூஜையில் பக்தர்களுக்கு அருள் பிரதாசம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தேவாங்கர் மகாஜன சபைத்தலைவர் நடராஜன், செயலர் சண்முகசுந்தரம், பொருளர் காமராஜ், துணைத்தலைவர்கள் பாண்டியன், ராமர், மல்லையா, துணைச்செயலாளர்கள் நாகராஜ்,வேல்முருகன், செந்தில், பூசாரி தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
The post பொன்னமராவதி சௌடாம்பிகை அம்மன் கோயிலில் மண்டல பூஜை appeared first on Dinakaran.
